கிராம உத்தியோகஸ்தர் தகவல் முகாமைத்துவ முறைமை கிராம உத்தியோகஸ்தர் தகவல் முகாமைத்துவ முறைமை

 

பயனர் உதவி (User Documentation)

முறைமைகளின் உதவி (System Documentation)

 

எக்சஸ் தரவுக்களஞ்சியத்தில் அட்டவணைகள், படிவங்கள் அடங்கிய பிரிவகளிற்கு உள்நுளைவதற்கு

 தட்டெழுத்துப் பலகையின் F11 எழுத்தை தட்டவும். அதன்போது கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இடது புறமாக ஏற்புடைய பிரிவுகள் தோன்றும்

 

 

இங்கு அட்டவணைகளின் துறைகளின் பெயர்களை மாற்ற முடியு.புதிய துறைகளை சேர்த்துக்கொள்ள முடியும்.

 எனினும் அட்டவணைகளிக்கிடையிலான தொடர்புகள் சேதப்படுத்தப்படாது திருத்தம்( Edit) செய்தல் வேண்டும்.

அட்டவணைகளுக்கிடையிலான தொடர்புகளை அறிந்து கொள்வதற்காக கீழே காட்டப்பட்டுள்ளவாறான Ribbon இல் Database Tools  Relationships  இனை அணுகவும்.

 

 

 அதன் போது கீழே படத்தில் காட்டப்படுள்ளவாறு அட்டவணைகளுக்கிடையிலான தொடர்புகளை அறிந்து கொள்ளலாம்

 

 

இத்தொடர்புகளை உங்களது எக்சஸ் அறிவின் அடிப்படையில் தேவையாயின் திருத்தம் செய்து கொள்ள முடியும். தொடர்புகள் சேதமடையாதவாறாக அட்டவணைகளை இற்றைப்படுத்த முடியும்.

இடப்பக்கமாக காணப்படும் வதிவாளர்களின் தரவுகளை சேகரிக்கும் Residence. அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது.

 

 

 

Details Form  என்பது தரவுக் களஞ்சியத்தை திறக்கும் சந்தர்ப்பத்தில் காட்டப்படும் பிரதான படிவமாகும்.

இப்படிவத்தை அல்லது ஏனைய படிவத்தை உங்களுக்கு தேவையானவாறு மாற்றம் செய்து கொள்வதற்காக கீழே காட்டப்பட்டுள்ளவாறாக  Layout View அல்லது Design View இனை அணுகவும்.

 

 

 

பின்வருமாறு படிவங்களை (forms) வகைப்படுத்தி காட்டலாம்

1.      Residents Form � குடியிருப்பாளர்களின் தகவல்களை Residents table ஆக காட்டும்.

2.      FamilyUnitsForm குடும்ப அலகுகளின் தகவல்களை FamilyUnits table மற்றும்  Residents table ஆக காட்டும்.

a.       இதன் மூலம் குடும்ப அங்கத்தவர்களைக் காட்ட  ResidentsSubForm பயன்படுத்தப்படும்.

 

3.      Campaigns Form � நிகழ்ச்சித்திட்டங்களின் தகவல்கள்  Campaigns table, Campaigns Map table மற்றும் Residents table ஆக காட்டும்.

a.     இதன் மூலம் ஏற்புடைய நிகழ்ச்சித்திட்டங்களிற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட குடியிருப்பாளர்களை காட்டுவதற்கு CampaignsMapSubForm. பயன்படும்

 

Audit எனும் சொல்லில் ஆரம்பமாகும் அட்டவணை திருத்த வலாற்றுடன் தொடர்புடைய தகவல்கள் சுயமாக சேகரிக்கப்படும். 

 

AuditForm  என முடிவுறும் படிவத்தில் இத்தகவல்கள் காண்பிக்கப்படும்.